இயந்திரப் பறவை
வரமா சாபமா என தெரியாமலேயே
நிரப்பப்பட்டுவிடுகின்றன
ஒவ்வொரு நாளினதும் விடியல்கள்
திருப்பங்கள் ஏதுமல்லாத தண்டவாளங்களில்
எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற பயணங்களில்
தொலைந்துபோய்விடுகின்றன
நினைவுகளில் தங்கிவிடாத நாட்களின்
எண்ணிக்கைகள்
ஏதாவது அதிசயம் நிகழ்ந்து
நாட்குறிப்பில் குறித்து வைக்கக்கூடிய
ஒரு நாளின் விடியல் பொழுதுக்காய்
எனது நாட்குறிப்பும் நிரப்பப்படாத பக்கங்களுடன்
காத்திருக்கிறது
ஸ் ரீபன்